/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கட்டுமானத் தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டுமானத் தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமானத் தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமானத் தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமானத் தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 11, 2025 10:40 PM
ராமநாதபுரம்; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானக் கழகம், வேலைவாய்ப்பு பயிற்சித் துறையுடன் இணைந்து 50 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது. கொத்தனார், கம்பி வளைப்பவர், கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், பிளாக்ஸ்மித், கிளாஸ் வொர்க், ஏசி மெக்கானிக், பெயின்டிங், டைல்ஸ் லேயர் ஆகிய 11 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவில் பயிற்சி பெறலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 800 தொழிலாளர்களுக்கு ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும்.
முதல் வார பயிற்சி செப்.,15ல் துவங்க உள்ளது. அடுத்த 3 மாதத்திற்கு வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாரமும் பயிற்சி திங்கள் கிழமை துவங்கி ஞாயிற்றுக் கிழமை முடிவடையும்.
இதில் கலந்து கொள்வோருக்கு தினமும் ரூ.800 என 7 நாட்களுக்கு ரூ.5600 வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. உணவு இலவசமாக வழங்கப்படும்.
சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.