/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் சத்தமின்றி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 சாமானிய மக்கள் பாதிப்பு பரமக்குடியில் சத்தமின்றி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 சாமானிய மக்கள் பாதிப்பு
பரமக்குடியில் சத்தமின்றி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 சாமானிய மக்கள் பாதிப்பு
பரமக்குடியில் சத்தமின்றி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 சாமானிய மக்கள் பாதிப்பு
பரமக்குடியில் சத்தமின்றி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 சாமானிய மக்கள் பாதிப்பு
ADDED : செப் 01, 2025 10:12 PM

பரமக்குடி : பரமக்குடியில் சில மாதங்களாக டீ, காபி விலை சத்தம் இல்லாமல் ஏற்றப்பட்ட சூழலில் கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போன்ற பெரு நகரில் டீ, காபி விலை ஏற்றம் நேற்று (செப்.,1) முதல் அமல்படுத்தப் பட்டது. ஆனால் பரமக்குடியில் கடந்த 6 மாதங் களாகவே விலை ஏற்றம் சத்தம் இல்லாமல் நிகழ்ந்து உள்ளது.இதன்படி 12, 15 மற்றும் 17 ரூபாய் வரை டீ விற்கப்படுகிறது. ஒரு சில இடத்தில் ரூ.10க்கும் கிடைக்கிறது.
இதே போல் காபி விலை ரூ.12 துவங்கி 20 வரை உள்ளது. மேலும் பிளாக் டீ போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய கூலித் தொழில் செய்யும் தொழிலாளிகள் நாள் ஒன்றுக்கு 5 டீ அருந்தினாலும், ஸ்னாக்ஸ் உட்பட ரூ.100 ரூபாய் வரை செலவு செய்யும் சூழல் உள்ளது.
தொடர்ந்து தொழி லாளிகள் தங்கள் அன்றாட குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே அரசு ஒட்டு மொத்தமாக மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.