ADDED : மே 29, 2025 11:10 PM
தொண்டி: தொண்டி புதிய பஸ் நிலையத்தில் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அலுவலர் கர்ணன் சென்று ஆய்வு செய்தார். யமினா ஸ்டோர் என்ற பெட்டிக் கடையில் தொண்டி தர்ஹா கால்மாட்டுத் தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் 52, புகையிலையை விற்பனை செய்தது தெரிந்தது. நான்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர்.