ADDED : பிப் 05, 2024 11:00 PM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தை இரு இழுவை கப்பல்கள் கடந்து சென்றன.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து புறப்பட்ட இழுவை கப்பல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் செல்ல நேற்று முன் தினம் பாம்பன் கடற்கரைக்கு வந்தது. இங்குள்ள ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் கப்பல் கேப்டன் மனு கொடுத்தார். நேற்று மதியம் துாக்கு பாலம் திறந்ததும் கப்பல் பாலத்தை கடந்து சென்றது.
இதனைத்தொடர்ந்து கோவாவில் இருந்து புறப்பட்ட மற்றொரு இழுவை கப்பலும் பாலத்தை கடந்து கொல்கட்டா துறைமுகம் நோக்கி சென்றது. மேலும் துாத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 5 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளும் நாகை கடலில் மீன் பிடிக்க பாலத்தை கடந்து சென்றன.