பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீர்
பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீர்
பாம்பன் கடலில் கலக்கும் கழிவுநீர்
ADDED : மே 29, 2025 11:09 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் குப்பை குவிந்தும், கடலில் கழிவு நீர் கலப்பதாலும் மீன்களுக்கு ஆபத்து அபாயம் உள்ளது.
பாம்பன் வடக்கு கடற்கரையில் ஏராளமான மீன்களை பதப்படுத்தும் குடிசைகள் உள்ளது. பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகில் சிக்கும் மீன்களை இங்கு ஐஸ் போட்டு பதப்படுத்தி பேக்கிங் செய்து வியாபாரிகள் வாகனத்தில் வெளியூருக்கு அனுப்புவார்கள்.
இந்நிலையில் இந்த குடிசைகள் அருகே கடற்கரையில் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி துர்நாற்றம் விசுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஊராட்சி வாறுகால் மூலம் நேரடியாக கடலில் கலக்கிறது.
இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து கடல்நீர் கருமை நிறத்தில் மாறியுள்ளது. இதனால் கடலோரத்தில் வாழும் சிறிய ரக மீன்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கடலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.