/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அலுவலக பயன்பாட்டிற்கு பல லட்சம் செலவுஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அலுவலக பயன்பாட்டிற்கு பல லட்சம் செலவு
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அலுவலக பயன்பாட்டிற்கு பல லட்சம் செலவு
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அலுவலக பயன்பாட்டிற்கு பல லட்சம் செலவு
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் அலுவலக பயன்பாட்டிற்கு பல லட்சம் செலவு
ADDED : ஜன 06, 2024 05:28 AM
கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக செலவினம் என்ற பெயரில் மதிப்பீடு இன்றி மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு கணக்கு எழுதப்பட்டு பில் எடுக்கப்படுவதாக யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்.
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கவுன்சில் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சேகர், பி.டி.ஓ., ராஜேந்திரன், உம்முல் ஜாமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
கவுன்சிலர் பிரபு, தி.மு.க.,; புல்லமடை ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார் பட்டணம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாண்டி, தி.மு.க.,; காவனக்கோட்டையில் இருந்து பூவானி வழியாக கொக்கூரணி செல்லும் ரோடு, ஆயங்குடி விலக்கில் இருந்து கருங்குடி செல்லும் ரோடு சேதமடைந்தது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.
துணைத் தலைவர் சேகர், தி.மு.க.,: சேதம் அடைந்த சாலைகள் மற்றும் மக்கள் பிரச்னைகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எவ்வாறு தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியும்.
மேலும் யூனியனில் பல்வேறு பராமரிப்பு மற்றும் பொருட்கள் வாங்கிய செலவினம் என மதிப்பீடு இன்றி நடப்பு கூட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் கவுன்சிலர்களின் முன் அனுமதியின்றி செலவினம் என எடுத்து வருவது முறையீட்டுக்கு வழிவகுக்கும் செயலாக உள்ளது.
செலவினங்கள் குறித்த பில் வவுச்சர்களை கவுன்சிலர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
பி.டி.ஓ., ராஜேந்திரன்; அனைத்து கவுன்சிலர்களிடம் மன்ற பொருள் குறித்த தகவல்கள் பகிர முடியாததால் தலைவரிடம் மன்ற பொருள் குறித்து ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானத்தில் சேர்க்கப்படுகிறது என்றார்.