Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நகைக்காக மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண் மகனுடன் கைது

நகைக்காக மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண் மகனுடன் கைது

நகைக்காக மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண் மகனுடன் கைது

நகைக்காக மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண் மகனுடன் கைது

ADDED : ஜூன் 15, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மூதாட்டி இறப்பில் சந்தேகம் எழுந்த நிலையில் அவரை நகைக்காக கொலை செய்ததாக வேலைக்கார பெண், அவரது மகனுடன் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சவுந்தரி 92. இவரது இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இதனால் இவர் தனியாக வசித்தார். இவரை பராமரிக்கும் வகையில் இலங்கை அகதியான குளித்தலை அன்னலட்சுமி 52, வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை ஞானசவுந்தரி படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது ஏழரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனது. பரமக்குடி டவுன் போலீசார் அன்னலட்சுமியிடம் விசாரித்தனர்.

இதில் நகைக்காக ஞான சவுந்தரியை மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாகவும், நகைகளை தனது மகன் பிரபுவிடம்35, கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். தாயும், மகனும் கைது செய்யப்பட்ட நிலையில் தங்க செயின், மோதிரம், தோடு பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அடகு கடையில் வளையலை வைத்து ரூ.80 ஆயிரம் பெற்றதாக பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டியை பராமரிக்க நம்பிக்கையுடன் வேலைக்கு வைத்த பெண்ணே கொலை செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us