ADDED : பிப் 05, 2024 11:41 PM

ராமநாதபுரம் -ராமநாதபுரம் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பட்டுப்புழு வளர்ப்பு கண்காட்சி நடந்தது.
ராமநாதபுரம் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கமுதி பகுதியில் பட்டுப்புழு உற்பத்தி அரசு மானியத்தில் நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கண்காட்சியில் மல்பரி நாற்று உற்பத்தி செய்வது எப்படி, பட்டுப்புழு முட்டை, வளர்ப்பு முறை குறித்து செயல்முறை விளக்கங்கள் இடம் பெற்றிருந்தது. பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.