/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மன்னார் வளைகுடா கடலில் ஆமைகளுக்கு பேராபத்து: மீனவர்களின் இரட்டை மடியால் அழிகின்றனமன்னார் வளைகுடா கடலில் ஆமைகளுக்கு பேராபத்து: மீனவர்களின் இரட்டை மடியால் அழிகின்றன
மன்னார் வளைகுடா கடலில் ஆமைகளுக்கு பேராபத்து: மீனவர்களின் இரட்டை மடியால் அழிகின்றன
மன்னார் வளைகுடா கடலில் ஆமைகளுக்கு பேராபத்து: மீனவர்களின் இரட்டை மடியால் அழிகின்றன
மன்னார் வளைகுடா கடலில் ஆமைகளுக்கு பேராபத்து: மீனவர்களின் இரட்டை மடியால் அழிகின்றன
ADDED : ஜூன் 21, 2025 11:20 PM

சாயல்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இழுவை மற்றும் இரட்டைமடி மீன்பிடிப்பால் அரிய வகை ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பேராபத்தை சந்திப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நெடிய கடல் பகுதியைக் கொண்டது மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியாகும். மீன் குஞ்சுகளின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் தொலை துாரங்களில் பயணித்து மீன்பிடிக்கக்கூடிய விசைப்படகுகளில் ஒரு சிலர் சட்டவிரோதமாக இழுவை மடி மற்றும் இரட்டை மடி மீன்பிடி முறையை பயன்படுத்துவதால் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான ஆமைகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
கடந்த டிச., ஜன., பிப்., மாதம் வாக்கில் ஆமைகள் கடலோரப் பகுதிகளில் முட்டையிட்டு 48 நாட்களுக்குப் பிறகு முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச், ஏப்., மாதம் வாக்கில் கடலுக்குச் சென்ற ஆமைக்குஞ்சுகள் பெரும்பாலானவை கடலில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் பாறை இடுக்குகளில் தங்களது வாழ்விடங்களை கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட பருவக் காலத்திற்குப் பிறகு ஆழ்கடலை நோக்கி பயணிக்கும். இந்நிலையில் இழுவை மற்றும் இரட்டை மடிகளில் ஒரு சிலர் மீன்பிடிப்பதால் பெருவாரியான ஆமை குஞ்சுகள் மற்றும் பெரிய ஆமைகள் தொடர் பாதிப்பை சந்திக்கின்றன. நிலத்தில் இருக்கும் ஆமைகள் வலையில் சிக்கும் போது மீன்களின் அழுத்தத்தால் மூச்சுத் திணறி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
ஒரு சில மீனவர்கள் வலையில் சிக்கும் ஆமைகளை பாதுகாப்பாக கரையில் விடுகின்றனர். இருப்பினும் இது போன்ற தடை செய்யப்பட்ட வலைகளால் சிறிய ரக மீன்களும் சேர்ந்து வலைகளில் சிக்குகின்றன. குறைந்த துாரத்தில் மீன் பிடிக்கக்கூடிய மீனவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். வனத்துறையினர் கூறியதாவது:
அரசு நிதியுடன் ஆமைக்குஞ்சுகளை முறையாக மீட்டெடுத்து அவற்றை பாதுகாப்பாக கடலுக்குள் விடுவதற்கு பெருமளவு மெனக்கெடுக்கிறோம். இந்நிலையில் ஒரு சிலர் சட்ட விரோதமாக வலைகளை பயன்படுத்துவதால் ஆமைகள் பெருமளவு அழிவை சந்திக்கின்றன. கடலின் தகவமைப்பில் ஆமைகளின் பங்கு முக்கியமானது.
எனவே வலைகளில் சிக்கும் ஆமைகளை கடலில் விடுவதற்கும், தடை செய்யப்பட்ட வலைகள் குறித்த உரிய விழிப்புணர்வை மீனவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர். இவ்விஷயத்தில் மாவட்ட மீன்வளத் துறையினரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தினரும் ஒன்றிணைவது அவசியத் தேவை.
--


