/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமைக் கருவேல மரங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள் கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமைக் கருவேல மரங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமைக் கருவேல மரங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமைக் கருவேல மரங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமைக் கருவேல மரங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 02, 2025 07:49 AM

கீழக்கரை; கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் 2011ல் ஜெட்டி பாலம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த கடல் கரைக்கு ஏராளமான மீனவர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஜெட்டி பாலத்தின் அருகே மீன்வளத்துறை அலுவலகம் முன்புறம் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. பராமரிப்பில்லாத நிலையில் அங்குள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வளாகப் பகுதியில் உள்ள தார் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: நாள்தோறும் இப்பகுதியில் உள்ள பிரதான கடற்கரைக்கு தொழில் நிமித்தமாக மீனவர்கள் அதிகம் வருகின்றனர். அதே நேரத்தில் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்கிற்காக ஏராளமானோர் கடற்கரை பகுதியில் குவிகின்றனர். இந்நிலையில் கடற்கரை முன்புறமுள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் அதிகளவு புதர் மண்டி காணப்படுகிறது.
இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. மன்னார் வளைகுடா வனச்சரகம் சார்பில் அமைக்கப்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அடங்கிய புகைப்படங்கள் பொலிவிழந்து துருப்பிடித்துள்ளது.
எனவே கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர், மீன்வளத்துறை, மன்னார் வளைகுடா அலுவலர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியுடன் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.