ADDED : மார் 20, 2025 07:02 AM
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
மழைநீர் சேகரிப்பு, காலநிலை மாறுதல், உடல் இயக்கவியல், இயற்கை, தானிய உணவுகள் உள்ளிட்டவைகளும், அதன் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் விளக்கினர். தலைமை ஆசிரியர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.