/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி
பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி
பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி
பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி
ADDED : செப் 04, 2025 04:13 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசுப் பள்ளியில் மாணவர் களிடையே துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு அறி வியல் மனப்பான்மையை வளர்க்கவும், மூட நம் பிக்கைகளை போக்க துளிர் வினாடி வினா போட்டி நடத்துகிறது.
அதன்படி ராமேஸ் வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் ஜூனியர் மாணவர்களுக்கும், 9, 10ம் வகுப்பு படிக்கும் சீனியர் மாணவர்களுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் சூப்பர் சீனியர் மாணவர்களுக்கு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இப்போட்டியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், பொது அறிவு, மற்றும் நடப்பு நிகழ்வுகள், துளிர் புத்தகம் ஆகிய பாடப்பகுதியில் இருந்து 5 சுற்றுகளாக நடத்தினர்.போட்டியில் முதல் 3 இடம் பிடித்த வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் செப்., 1ல் மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
போட்டியை ராமேஸ் வரம் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் லியோன், வட்டார செயலாளர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் ஆகியோர் நடத்தினார்கள்.