ADDED : மார் 24, 2025 06:10 AM

பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ சங்கர வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியின் 28 வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் வக்கீல் சவுமிய நாராயணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மீராபானு வரவேற்றார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர். திரைப்பட நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் பேசினார்.
தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், ஆயிரவைசிய கல்வி நிறுவனங்கள் தலைவர் போஸ், நகராட்சி கவுன்சிலர்கள் தேவிகா, வசந்த கல்யாணி வாழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்தார். உதவி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.