/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கரை பகுதிகளில் சப்போட்டா விளைச்சல் கீழக்கரை பகுதிகளில் சப்போட்டா விளைச்சல்
கீழக்கரை பகுதிகளில் சப்போட்டா விளைச்சல்
கீழக்கரை பகுதிகளில் சப்போட்டா விளைச்சல்
கீழக்கரை பகுதிகளில் சப்போட்டா விளைச்சல்
ADDED : செப் 04, 2025 04:14 AM
கீழக்கரை: கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளான காஞ்சிரங்குடி, அளவாய்கரைவாடி, செங்கழுநீரோடை மற்றும் ரெகுநாதபுரம், தினைக்குளம், பஞ்சந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு சப்போட்டா பழங்கள் விளைச்சலுக்கு வந்துள்ளது.
டென்னிஸ் பந்து, கிரிக்கெட் பந்து, உருண்டை, சப்பை உள்ளிட்ட பல வடிவங்களில் சப்போட்டாக்கள் மரங்களில் காய்த்து குலுங்குகிறது.
குறிப்பாக காஞ்சிரங்குடி பகுதிகளில் மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளுக்குள் அதிகளவு சப்போட்டா மரங்கள் உள்ளன.
அதிக இனிப்புச் சாறு கொண்ட சப்போட்டா பழங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்கின்றனர். கிலோ சப்போட்டா ரூ.40 மற்றும் 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவ குணங்கள்: சப்போட்டா பழத்தில் ஆன்டி-ஆக்சிடென்ட், வைட்ட மின் ஏ, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிகளவு நிறைந்து இருப்பதால் அது உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது. உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்றவைகளை குறைப்பதில் சப்போட்டா சிறந்து விளங்குகிறது.