/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொடர் மழை அறிவிப்பால் உப்பு உற்பத்தி தேக்கம் தொடர் மழை அறிவிப்பால் உப்பு உற்பத்தி தேக்கம்
தொடர் மழை அறிவிப்பால் உப்பு உற்பத்தி தேக்கம்
தொடர் மழை அறிவிப்பால் உப்பு உற்பத்தி தேக்கம்
தொடர் மழை அறிவிப்பால் உப்பு உற்பத்தி தேக்கம்
ADDED : மார் 24, 2025 01:40 AM

ராமநாதபுரம் : தமிழகத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்ற வானிலை மைய அறிவிப்பால் ராமநாதபுரம் மாவட்ட உப்பளங்களில் உவர்ப்பு நீரை தேக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தியில் தேக்க நிலையுள்ளது.
துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பருவமழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.
ஜனவரி கடைசி வாரத்திலிருந்து உப்பு உற்பத்திக்கான முன் ஏற்பாடு பணி தொடங்கும். இந்தாண்டு உப்பு உற்பத்தி முன்னேற்பாடு பணி துவங்கும் முன் பிப்ரவரி கடைசி வாரத்தில் மழை பெய்தது.
இதனால் உப்பளங்களில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மார்ச் முதல் தேதியில் கனமழையால் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து உப்பளங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி உவர்ப்பு நீரை தேக்கும் பணிக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
வானிலை மையத்தின் தமிழகத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்ற அறிவிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதி உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி உவர்ப்பு நீரை தேக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏப்., வரை மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உப்பள தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்தாண்டு சீசனில் 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மழையால் உற்பத்தியில் 40 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உப்பு விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.