/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூன் 12, 2025 11:08 PM

தேவிபட்டினம்; தேவிபட்டினம் பகுதியில் உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் உப்பு உற்பத்தி அதிகரித்துஉள்ளது.
கிழக்கு கடற்கரை, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரி மடம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தரம் உப்பு தோல் பதனிடுதல் கருவாடு உலர்த்துதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடலோர பகுதிகளில் நிலவும் வெப்பம் காரணமாக உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உப்பு உற்பத்தி அதிகரிப்பால் அதிக அளவிலான உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.