/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் - டூவீலர் மோதல் விற்பனை பிரதிநிதி பலி கார் - டூவீலர் மோதல் விற்பனை பிரதிநிதி பலி
கார் - டூவீலர் மோதல் விற்பனை பிரதிநிதி பலி
கார் - டூவீலர் மோதல் விற்பனை பிரதிநிதி பலி
கார் - டூவீலர் மோதல் விற்பனை பிரதிநிதி பலி
ADDED : ஜூன் 19, 2025 11:53 PM
தொண்டி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 29. மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு டூவீலரில் தொண்டியில் இருந்து எஸ்.பி.பட்டினத்தை நோக்கி சென்றார்.
எதிரில் ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த லெனின்ராஜ் 50, காரில் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து தொண்டி நோக்கி சென்றார். தொண்டி காந்திநகர் அருகே காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார்.தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.