Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரூ.5 கோடியில் புதிய அருங்காட்சியகம்  திட்டம் அறிவிப்புடன் கிடப்பில்: இடியும் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது

ரூ.5 கோடியில் புதிய அருங்காட்சியகம்  திட்டம் அறிவிப்புடன் கிடப்பில்: இடியும் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது

ரூ.5 கோடியில் புதிய அருங்காட்சியகம்  திட்டம் அறிவிப்புடன் கிடப்பில்: இடியும் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது

ரூ.5 கோடியில் புதிய அருங்காட்சியகம்  திட்டம் அறிவிப்புடன் கிடப்பில்: இடியும் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது

ADDED : ஜன 06, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் ஜவான்பவன் கட்டடத்தின் முதல் தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம்செயல்படுகிறது. கீழ்தளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கானமருத்துவமனை உள்ளது. அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள், பழமையான மரத்தினாலான சிற்பங்கள், ஓவியங்கள், அரியவகைநாணயங்கள், ஓலைச்சுவடிகள் என நுாற்றுக்கணக்கான பழங்காலபொருட்கள் உள்ளன.

இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதியபராமரிப்பு இல்லாமல் தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. பல இடங்களில் கட்டடத்தின் சுவரில் விரிசல்ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள், விபத்துஅச்சத்துடன் பணிபுரிகின்றனர். பார்வையாளர்கள் வருகையும்குறைந்துள்ளது.

இதையடுத்து புதிய அரசு அருங்காட்சியகம் ரூ.5கோடியில் அமைக்கப்படஉள்ளது. இதற்காக ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவகம் அருகிலும், யாத்திரி நிவாஸ் பகுதி மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், அம்மா பூங்கா அருகிலும் இடத்தைஅருங்காட்சியக அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.

இருப்பினும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் வகையில் இடத்தை தேடும்படலம் 2 ஆண்டுகளாக தொடர்கிறது. 2024ல் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமார்கூறுகையில், அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாகவருவாய்த்துறையினர் மூலம் இடம் ராமேஸ்வரம் பகுதியில் தேர்வு செய்து அருங்காட்சியம் இயக்குனர் அலுவலகத்திற்குஅனுப்பியுள்ளோம்.

புதிய கட்டடம் கட்டும் வரைதற்காலிகமாக வேறுஇடத்திற்கு அருங்காட்சியகத்தைமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us