/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நெடுஞ்சாலையில் கழிவு நீரால் நோய் அபாயம்நெடுஞ்சாலையில் கழிவு நீரால் நோய் அபாயம்
நெடுஞ்சாலையில் கழிவு நீரால் நோய் அபாயம்
நெடுஞ்சாலையில் கழிவு நீரால் நோய் அபாயம்
நெடுஞ்சாலையில் கழிவு நீரால் நோய் அபாயம்
ADDED : பிப் 05, 2024 11:01 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் குளம் போல பல நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாக்கடை கால்வாய் அடைப்பால் கழிவுநீர் குளம் போல தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக கழிவுநீரை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.