/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சி ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சி
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சி
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சி
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சி
ADDED : ஜூன் 30, 2025 04:55 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கலவர கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சியினை சந்தீஷ் எஸ்.பி., பார்வையிட்டார்.
கலவர நேரங்களில் கும்பல்கள் ஏற்பட்டு பிரச்னை செய்தால் அவர்களை கலைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து போலீசாருக்கு பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கவாத்து பயிற்சியும், கலவர நேரங்களில் கும்பலை கட்டுப்படுத்தும் பயிற்சியும் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதில் கண்ணீர் புகை குண்டு வீசுதல், வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கும்பலை கலைப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்று போலீசாருக்கு அவசர நேரங்களில் எப்படி பணிபுரிவது, கலவர கும்பலை கலைப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.