/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேலாண்மை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ADDED : ஜன 06, 2024 05:41 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 99 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
திருவாடானை தாலுகாவில் உள்ள 80 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் 19 அரசு நடுநிலைப்பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மேலாண்மைக் குழுவை சேர்ந்த பெற்றோர் கலந்து கொண்டனர்.
பள்ளிகளை துாய்மையாக வைத்திருத்தல், ராமநாதபுரத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் மாணவர்கள் கலந்து கொள்வது, பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்துதல், பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்று திறனாளிகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல், பள்ளி வளாகங்களில் போதை பொருள் பயன்பாடுகளை தடுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.