/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 25, 2024 04:54 AM
திருவாடானை: திருவாடானை அருகே முகிழ்த்தகம் ஊராட்சியில் சின்ன முகிழ்த்தகம், ஏசுபுரம், வெள்ளாள கோட்டை, முகிழ்த்தகம், மேலக்கோட்டை, முத்தமிழ் நகர், சிங்காரவேலர் நகர், எம்.வி. காந்தி நகர், சோலியக்குடி, எம்.வி.பட்டினம், கடம்பனேந்தல், சம்பை ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள இரண்டு டிரான்ஸ்பார்மர்களில் இருந்து சப்ளை ஆகும் மின்சாரம் போதுமானதாக இல்லாததால் டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சரியாக செயல்படவில்லை. முகிழ்த்தகம் ஊராட்சித் தலைவர் மல்லிகா கூறியதாவது:
முகிழ்த்தகம் ஊராட்சியில் வீடுகள் அதிகரித்துள்ளன. மேலக்கோட்டை, வெள்ளாளகோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதுடன் குறைவழுத்த மின்சாரம் சப்ளை ஆகிறது. சிறிய காற்று அல்லது மழை பெய்தாலும் மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது.
எனவே இப்பகுதியில் ஏற்படும் குறைந்த அழுத்த மின் பிரச்னைக்கு கூடுதலாக புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.