/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பெரிய கண்மாய் கரைகளில் வளரும் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கைபெரிய கண்மாய் கரைகளில் வளரும் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பெரிய கண்மாய் கரைகளில் வளரும் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பெரிய கண்மாய் கரைகளில் வளரும் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பெரிய கண்மாய் கரைகளில் வளரும் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 11:18 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன மடை கரையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரை 20 கி.மீ.,நீளத்தில் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீரால் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு மடைவீதம் 20 பாசன மடைகள் அமைந்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டதால் கரையோரங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன.
இதனால் விவசாயிகள் எளிதாக 20 பாசன மடைகளுக்கும் சென்று வரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக கண்மாய் கரையோரம் முழுவதும் சீமைக்கருவேலம் வளர்ந்துள்ளன. இவற்றை தற்போதே அகற்றாவிட்டால் கண்மாய் கரைகள் முழுவதும் ஆக்கிரமித்து விவசாயிகள் பாசன மடைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.
எனவே கண்மாய் கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.