Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தடைகாலம் முடிந்தபின் கடலுக்கு செல்வதை ஒழுங்கு படுத்த கோரிக்கை

தடைகாலம் முடிந்தபின் கடலுக்கு செல்வதை ஒழுங்கு படுத்த கோரிக்கை

தடைகாலம் முடிந்தபின் கடலுக்கு செல்வதை ஒழுங்கு படுத்த கோரிக்கை

தடைகாலம் முடிந்தபின் கடலுக்கு செல்வதை ஒழுங்கு படுத்த கோரிக்கை

ADDED : ஜூன் 12, 2024 05:34 PM


Google News
ராமநாதபுரம்: மீன்பிடி தடைக்காலத்திற்குப்பின் கடலுக்கு செல்வதில் விதிமீறலை தடுத்து ஒழுங்கு முறையை பாதுகாக்க வேண்டும் என கடல்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தடைகாலத்திற்கப்பின் ஜூன் 15 ல் காலையில் மீன் பிடி அனுமதி சீட்டு வாங்கித்தான் கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் இந்த ஒழுங்கு முறை மீறப்படுகிறது. ஜூன் 14 மாலையே மீன் பிடி அனுமதி சீட்டு பெறாமலேயே கடலுக்குள் செல்கின்றனர்.

பொதுவாக ஒரு பகல், ஒரு இரவு தான் விசைப்படகுக்கு அனுமதிக்கப்பட்ட காலம். அதற்கு மாறாக இரு பகல், இரு இரவுகள் மீன் பிடிப்பதால் அதற்கேற்ப வருவாய் கிடைப்பதில்லை.

அதிகமான செலவு:



விசைப்படகுகள் பழுது பார்க்க ஒரு படகுக்கு குறைந்தபட்சம் ரூ. 2லட்சம் செலவாகிறது. சீக்கிரமாக கடலுக்கு செல்வதால் அதிகமான டீசல், ஐஸ்கட்டிகள் தேவைப்படுகின்றன. டிமாண்ட் காரணமாக இவற்றை இரு மடங்கு விலை உயர்த்தி விற்கின்றனர். ஏற்றுமதி மீன்களில் இறால், கணவாய் மீன்கள் மட்டுமே பதப்படுத்தி மீன்களை தரம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். இந்த மீன்களை கிலோவுக்கு ரூ.100 முதல் 150 குறைவாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் விசைப்படகு மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அடுத்தபடியாக ஏற்றுமதி ரகமாக இருப்பது நண்டு கடலில் பிடித்த 16 முதல் 20 மணி நேரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தால் மட்டுமே உயிருடன் பாதுகாக்க முடியும். மீனவர்கள் கரைக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால் நண்டுகளை ஐஸ் வைத்து பதப்படுத்தினாலும் பயன்படாமல் போய் விடுகிறது. நண்டுகளை உள்ளூர் மார்க்கெட்டில் விற்பதால் உரிய விலை கிடைப்பது இல்லை.

தமிழக கடல் பகுதியான ராமநாதபுரம், துாத்துக்குடி, பதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தொழில் ஒழுங்கு முறையை கடைபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறும் விசைப்படகுகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us