/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி ஸ்டேஷனில் வெளி மாநில ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை பரமக்குடி ஸ்டேஷனில் வெளி மாநில ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
பரமக்குடி ஸ்டேஷனில் வெளி மாநில ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
பரமக்குடி ஸ்டேஷனில் வெளி மாநில ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
பரமக்குடி ஸ்டேஷனில் வெளி மாநில ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : செப் 11, 2025 10:38 PM
ராமநாதபுரம்; ராமேஸ்வரத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என ராமேஸ்வரம் பிராந்திய ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் மனு அளித்தனர்.
சங்கத்தின் தலைவர் செல்வ விக்னேஷ்வர கார்த்திக் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்கும் பரமக்குடிக்கு வணிக ரீதியாகவும், கல்வி, சுற்றுலா ரீதியாகவும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் பரமக்குடி ரயில் நிலையம் ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி என்.எஸ்.ஜி 4 தரம் பெற்றுள்ளது.
இந்நிலையில் விரைவு ரயில்கள் பரமக்குடியில் நின்று செல்லாததால் பரமக்குடி, சுற்றுவட்டார பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஷ்பூர், அயோத்யா கன்டோன்மன்ட், மங்களூரு, கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்களை பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யுமாறு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.