ADDED : ஜன 28, 2024 05:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே போகலுார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியில் சியர் அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி மாடசாமி கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமையாசிரியர் ராக்கு ஏற்பாடுகளை செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியை நன்றி கூறினார்.
நயினார்கோவில் ஒன்றியம் அ.பனையூர் சண்முகநாதன் தொடக்கப்பள்ளியில் நிர்வாகி கண்ணன் தேசிய கொடியேற்றினார்.
உதவி தலைமையாசிரியை மஞ்சுளா வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்பு வழங்கப்பட்டது.
தலைமையாசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி முத்தரையர் நகர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் வீரக்குமார் கொடியேற்றினார். பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
*திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் சிவலிங்கம் தேசியக் கொடி ஏற்றினார். பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், ராஜேஸ்வரி பங்கேற்றனர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சஹானா தேசியக் கொடி ஏற்றினார்.
துணை சேர்மன் ஹமீது சுல்தான் முன்னிலை வைத்தார். கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலாடி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் முத்துலட்சுமி தேசியக் கொடியேற்றினார். ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி பாண்டியன் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் ஜெயஆனந்த், ராஜா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வினோத்குமார் தேசியக் கொடி ஏற்றினார்.
*கமுதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேதுராமன், மண்டல துணை தாசில்தார் வேலவன், ஆர்.ஐ., கலாராணி, முதுநிலை வரைவாளர் நிறைமதி ஆகியோரின் சிறப்பான பணிக்காக கலெக்டர் விஷ்ணு சந்திரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதே போன்று பரமக்குடியில் நடந்த விழாவில் கமுதி தாலுகா அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமையிடத்து துணை தாசில்தார் தெய்வேந்திரன், ஆர்.ஐ.,க்கள் கோவிந்தராஜன், பரமேஸ்வரி முதுநிலை பணியாளர்கள், வி.ஏ.ஓ, நிலஅளவையர், தலையாரி உட்பட 27 பேருக்கு பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
-------பரமக்குடி
பரமக்குடியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சேதுகருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார்.
பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப்பள்ளியில் தலைவர் செல்லம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தாயுமானவன் கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
பரமக்குடி புது நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் தலைமை ஆசிரியர் அணில் வரவேற்றார். தாளாளர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்தார்.
மஞ்சுர் ஆர்.ஐ., நித்யா கொடியேற்றினார். தலைமை ஆசிரியை ஜெயசுதா நன்றி கூறினார்.
எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் காங்., நெசவாளர் அணி மாநில செயலாளர் கோதண்டராமன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
பரமக்குடி சவுராஷ்டிர தேசிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கல்வி கழக தலைவர் ராமையன் தலைமை வகித்தார். தாளாளர் குப்புசாமி வரவேற்றார். மூத்த ஆசிரியர் புஷ்பலதா தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
பாரதியார் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் வரவேற்றார். பள்ளி நிர்வாகி நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன் தேசியக் கொடி ஏற்றினார்.
கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சபை தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.
ஆதிதிராவிடர் நல தாசில்தார் காதர் முகைதீன் தேசியக் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார்.
பரமக்குடி காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவி தேசியக் கொடி ஏற்றினார்.
நகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமார், துரை சரவணன் முன்னிலை வகித்தனர்.