/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோட்டை கரை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றுங்கள் கோட்டை கரை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றுங்கள்
கோட்டை கரை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றுங்கள்
கோட்டை கரை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றுங்கள்
கோட்டை கரை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றுங்கள்
ADDED : ஜூன் 19, 2025 11:49 PM
ஆர்.எஸ்.மங்கலம்: கோட்டக்கரை ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சருகணி, மணிமுத்தாறு முடிவுப் பகுதியில் இருந்து துவங்கும் கோட்டைக்கரையாறு, சாத்தனுார், ஆனந்துார், ஆய்ங்குடி, கொக்கூருணி, சனவேலி, அழியாதன் மொழி, சேந்தனேந்தல் ஓடை வழியாக சென்று கிழக்கு கடற்கரை பகுதியில் கடலில் கலந்து முடிவடைகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கடலில் வீணாகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாயநிலங்கள் தண்ணீரில் மூழ்குவது தடுக்கப்படுகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக கோட்டைக்கரை ஆறு சீரமைக்கப்படாததால் ஆறு மண் மேடாக மாறி சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்துஉள்ளன.
இதனால் மழைக்காலங்களில் இந்த ஆற்றின்வழியே உபரி நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆற்றில்உள்ள சீமைக்கருவேலம்புதர்களை அகற்றி ஆற்றை துார்வாரி பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.