/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை அரசு மீட்க உறவினர்கள் வலியுறுத்தல் அமைச்சர் ராஜகண்ணப்பன் முற்றுகைகுவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை அரசு மீட்க உறவினர்கள் வலியுறுத்தல் அமைச்சர் ராஜகண்ணப்பன் முற்றுகை
குவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை அரசு மீட்க உறவினர்கள் வலியுறுத்தல் அமைச்சர் ராஜகண்ணப்பன் முற்றுகை
குவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை அரசு மீட்க உறவினர்கள் வலியுறுத்தல் அமைச்சர் ராஜகண்ணப்பன் முற்றுகை
குவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை அரசு மீட்க உறவினர்கள் வலியுறுத்தல் அமைச்சர் ராஜகண்ணப்பன் முற்றுகை
ADDED : ஜன 04, 2024 12:52 AM

ராமநாதபுரம்:குவைத் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று பொய்யான போதை வழக்கில் சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ராமநாதபுரத்தில் உறவினர்கள் வலியுறுத்தினர்.
திருப்பாலைக்குடி ஜேசு 38, கார்த்திக் 22, மோர்பண்ணை சந்துரு 22, பாசிப்பட்டினம் வினோத் குமார் 23, ஆகியோர் 3 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்றனர். அவர்கள் மற்ற நாட்டினருடன் இணைந்து கடலில் மீன் பிடித்த போது விசைப்படகில் ஈரான் நாட்டை சேர்ந்த சிலர் மற்றொரு நாட்டை சேர்ந்த ஒருவரிடம் ஒரு பொருளை வழங்கினர். அதில் போதைப்பொருள் இருந்ததால் அந்த நபருடன் 4 தமிழக மீனவர்களையும் குவைத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குவைத் மொழி தெரியாததால் அவர்களது நியாயத்தை தெரிவிக்க முடியவில்லை. எனவே குவைத் சிறையில் சிரமப்படும் 4 பேரையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ராமநாதபுரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உறவினர்கள் வலியுறுத்தினர்.
அமைச்சர் முற்றுகை
மீனவர்களின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த போது அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு கூட்டம் நடந்தது. அவரிடம் மனு அளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சரை உறவினர்கள் முற்றுகையிட்டனர். மீனவர்களை மீட்க உதவும்படி வலியுறுத்தினர். இதுகுறித்து கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.