/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பார் உரிமையாளரை கொலை செய்ய முயன்றோரை கைது செய்ய வலியுறுத்தல் உறவினர்கள் எஸ்.பி.,யிடம் முறையீடு பார் உரிமையாளரை கொலை செய்ய முயன்றோரை கைது செய்ய வலியுறுத்தல் உறவினர்கள் எஸ்.பி.,யிடம் முறையீடு
பார் உரிமையாளரை கொலை செய்ய முயன்றோரை கைது செய்ய வலியுறுத்தல் உறவினர்கள் எஸ்.பி.,யிடம் முறையீடு
பார் உரிமையாளரை கொலை செய்ய முயன்றோரை கைது செய்ய வலியுறுத்தல் உறவினர்கள் எஸ்.பி.,யிடம் முறையீடு
பார் உரிமையாளரை கொலை செய்ய முயன்றோரை கைது செய்ய வலியுறுத்தல் உறவினர்கள் எஸ்.பி.,யிடம் முறையீடு
ADDED : ஜூன் 26, 2025 10:41 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் டூவீலரில் சென்ற பார் உரிமையாளரை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற நிலையில் அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், அகமுடையார் சங்கத்தினர் எஸ்.பி., சந்தீஷ் இடம் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் சூரன்கோட்டையை சேர்ந்த சிவசங்கரன் மகன் நிர்மல் 34. இவர் கிருஷ்ணாநகர் பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிர்மலுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 25) டூவீலரில் நிர்மல் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் சந்திப்பு பகுதியில் சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 8 பேர் அரிவாளால் நிர்மலை வெட்டிவிட்டு ஓடி விட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்மல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் நிர்மலை கொலை செய்ய முயன்ற கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், ராமநாதபுரம் அகமுடையார் முன்னேற்ற சங்கம் மாவட்டத்தலைவர் ராஜாஜி ஆகியோர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் முறையிட்டனர்.
அப்போது எஸ்.பி., சந்தீஷ் விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.