/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் வாலிபரிடம் நுாதன முறையில் ரூ.2.68 லட்சம் மோசடிராமநாதபுரம் வாலிபரிடம் நுாதன முறையில் ரூ.2.68 லட்சம் மோசடி
ராமநாதபுரம் வாலிபரிடம் நுாதன முறையில் ரூ.2.68 லட்சம் மோசடி
ராமநாதபுரம் வாலிபரிடம் நுாதன முறையில் ரூ.2.68 லட்சம் மோசடி
ராமநாதபுரம் வாலிபரிடம் நுாதன முறையில் ரூ.2.68 லட்சம் மோசடி
ADDED : ஜன 25, 2024 05:02 AM
ராமநாதபுரம்; -ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் நெட் பேங்கிங் யு.பி.ஐ., மூலம் ரூ.2.68 லட்சம் மோசடி செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜன் 26. பகுதி நேரவேலை செய்து சம்பாதிக்கலாம் என்று இவரது வாட்ஸ்-அப்எண்ணிற்கு வந்த தகவலை நம்பி அதில் கொடுக்கப்பட்ட அலைபேசியில் ராஜன் தொடர்பு கொண்டார்.
அதில் பேசியவர்கள் குறிப்பிட்ட சில யுடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து ஸ்கிரீன் ஷாட்டுகள் எடுத்துஅனுப்பினால் அதிகளவில் கமிஷன் தரப்படும் எனதெரிவித்தனர். இதனை நம்பி அவர்கள்கொடுத்த டாஸ்க்கைசெய்துள்ளார்.
இதற்கான பணத்தை ராஜன் வங்கிகணக்கிற்கு அனுப்பினர்.
இதனால் ஏற்பட்ட நம்பிக்கையால் தொடர்ந்து அவர்கள் கொடுத்தடாஸ்க்கை செய்தால் அதிக பணம் அதிகம் கிடைக்கும் என நினைத்து யு.பி.ஐ., மற்றும் நெட் பேங்கிங் மூலம் ரூ.2.68 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு தான் தெரிந்தது அவர்கள் கமிஷனாக அனுப்பிய பணத்தை எடுக்க முடியாமல் போனது.
சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது மீண்டும் பணம்அனுப்புமாறு கூறினர். சந்தேகமடைந்த ராஜன் ராமநாதபுரம் சைபர் கிரைம்போலீசில் புகார் செய்தார்.
சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரிக்கின்றனர்.