/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாநில அளவில் கேரம் போட்டி ராமநாதபுரம் மாணவர் வெற்றி மாநில அளவில் கேரம் போட்டி ராமநாதபுரம் மாணவர் வெற்றி
மாநில அளவில் கேரம் போட்டி ராமநாதபுரம் மாணவர் வெற்றி
மாநில அளவில் கேரம் போட்டி ராமநாதபுரம் மாணவர் வெற்றி
மாநில அளவில் கேரம் போட்டி ராமநாதபுரம் மாணவர் வெற்றி
ADDED : மே 29, 2025 11:14 PM

ராமநாதபுரம்: சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாணவர் பிரஜன் முதலிடம் பெற்றார்.
விருதுநகர் மாவட்ட கேரம் கழகம் சார்பில் 21 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் மே 23 முதல் 25 வரை நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் ஆ.பிரஜன் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இவர் டிச.,ல் புதுடில்லியில் நடக்கும் தேசிய கேரம் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட உள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் பிரஜனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாழ்த்தினார். கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் உடனிருந்தனர்.