/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கேலோ இந்தியா போட்டியில் ராமநாதபுரம் வீரர் சாதனை கேலோ இந்தியா போட்டியில் ராமநாதபுரம் வீரர் சாதனை
கேலோ இந்தியா போட்டியில் ராமநாதபுரம் வீரர் சாதனை
கேலோ இந்தியா போட்டியில் ராமநாதபுரம் வீரர் சாதனை
கேலோ இந்தியா போட்டியில் ராமநாதபுரம் வீரர் சாதனை
ADDED : ஜூன் 03, 2025 07:02 AM

ராமநாதபுரம் : இந்தியாவின் யூனியன் பிரதேசமான டையூவில் நடந்த 'கேலோ இந்தியா' கடற்கரை மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் வீரர் தருண் வெண்கல பதக்கம் வென்றார்.
டையூவில் தேசிய அளவிலான கேலோ இந்தியா கடற்கரை மல்லர் கம்பம் போட்டி மே 18 முதல் 21 வரை நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 16 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
தமிழக அணி ஆண்கள், பெண்கள் இரு அணிகளும் குழு பிரமிடு போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் தருண் 14, மல்லர் கம்பம், மல்லர் கயறு, தொங்கும் மல்லர் கம்பம் ஆகியவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.