/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம்- -ஹூப்ளி சிறப்பு ரயில் அக்.,26 வரை நீட்டிப்பு ராமநாதபுரம்- -ஹூப்ளி சிறப்பு ரயில் அக்.,26 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம்- -ஹூப்ளி சிறப்பு ரயில் அக்.,26 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம்- -ஹூப்ளி சிறப்பு ரயில் அக்.,26 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம்- -ஹூப்ளி சிறப்பு ரயில் அக்.,26 வரை நீட்டிப்பு
ADDED : செப் 10, 2025 03:14 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 07356) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் செப்., வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அக்.,26 வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹூப்ளி- ராமநாதபுரம் இடையே அக்.,4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறு மார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து அக்.,5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.