Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம்: விவசாய நிலத்தில் இரைதேடி குவிந்த பறவைகள்

ராமநாதபுரம்: விவசாய நிலத்தில் இரைதேடி குவிந்த பறவைகள்

ராமநாதபுரம்: விவசாய நிலத்தில் இரைதேடி குவிந்த பறவைகள்

ராமநாதபுரம்: விவசாய நிலத்தில் இரைதேடி குவிந்த பறவைகள்

ADDED : ஜன 03, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பருவ கால மழைப் பொழிவால் கண்மாய்கள் நிறைந்துள்ளன.இந்த சீசனை அனுபவிக்க பறவைகள் விவசாய நிலங்களில் குவிகின்றன.

ராமநாதபுரம் பகுதியில் அதிகளவில் பருவமழையை பயன்படுத்தி நெல் அதிகளவில்பயிரிட்டுள்ளனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் இதமான சீசன் நிலவுகிறது. இந்த நேரங்களில் பறவைகள் சரணாலயங்களில் அதிகளவில் குவிகின்றன.

தேர்தங்கல், சக்கரக்கோட்டை பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் இந்த சீசன் முழுவதும் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும். பருவ காலம் நிறைவு பெற்ற பின் குஞ்சுகளுடன் இடம் பெயரும்.

தற்போது தேர்தங்கல் செல்லும்பகுதியில் காவனுாரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இங்கு இரை தேடி வெள்ளைஅரிவாள் மூக்கன் பறவையினங்கள் குவிந்தன. இந்த பறவையினங்கள் நீர்ப்பறவைகளோடு சேர்ந்து ஒரே இடத்தில் கூடு கட்டும்.

இவை அதிகமாக வயல்வெளிகளிலும், உள்நாட்டு ஆழம் குறைந்த நீர் நிலைகளிலும்,கடலோரப்பகுதிகளிலும் காணப்படும். இவை உணவாக தவளை, தலைப்பிரட்டை, நத்தைப் பூச்சி, புழு, மீன்களை உணவாக்கி கொள்ளும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us