/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள் ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா: ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள்
ADDED : ஜூன் 06, 2025 02:35 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை நிறைவு விழாவில் கோயில் உதவி குருக்கள் அனுமன் வேடத்தில் பக்தி பரவசத்தில் வலம் வந்தார்.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயில் தல வரலாற்றை பக்தர்களுக்கு தெரிவிக்கும் விதமாக ஜூன் 3ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது.
நேற்று நிறைவு விழாவையொட்டி இலங்கையில் இருந்து சீதையை மீட்டு தனுஷ்கோடி வரும் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்ய சீதை முடிவெடுத்து சிவலிங்கம் வேண்டி சஞ்சீவி மலைக்கு அனுமனை அனுப்புகிறார்.
இதற்கிடையில் அனுமன் வர தாமதமானதும் அக்னி தீர்த்த கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்து தரிசிக்கின்றனர். இதன்பின் சிவலிங்கத்துடன் வரும் அனுமன் பூஜை முடிந்ததை கண்டு கோபமடைகிறார்.
உடனே சீதை வடிவமைத்த சிவலிங்கத்தை தன் வாலில் கட்டி இழுக்க முயற்சித்த போது வால் அறுந்து விடுகிறது.
இதன்பின் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு முதலில் பூஜை செய்யப்படும் என ராமர் கூறியதும் அனுமன் அமைதி கொள்கிறார் , என ராமாயணம் வரலாற்றில் கூறப்படுகிறது.
இதன்படி நேற்று கோயில் உதவி குருக்கள் சந்தோஷ் அனுமன் வேடமிட்டு கோயில் முதல் பிரகாரத்தை பக்தி பரவசத்துடன் வலம் வந்து சுவாமி சன்னதி முன்பு அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின் ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, பஞ்சமூர்த்தி, பா.ஜ., மாவட்ட குழு உறுப்பினர் ராமு, பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.