ADDED : மார் 26, 2025 05:13 AM
கமுதி, : கமுதி கே.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
செயலர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் அய்யாதுரை, பொருளாளர் குமரன், முதல்வர் கார்த்திக் காமாட்சி முன்னிலை வகித்தனர்.
அப்போது ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரபி ஆசிரியர் சாஹிதா சுல்தானா ரமலானின் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின் மாணவர்கள் குர்ஆன் வாசித்தும், பாடல் பாடியும் சிறப்பித்தனர்.இனிப்பு வழங்கப்பட்டது.