/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரோட்டில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு ரோட்டில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ரோட்டில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ரோட்டில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ரோட்டில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : மே 21, 2025 11:53 PM

திருவாடானை: திருவாடானையில் கோடைமழை பெய்து வரும் நிலையில் ரோடு, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திருவாடானை பாரதிநகரில் மூன்று வீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பாரூரில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை- அஞ்சுகோட்டை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
இது தவிர பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.