ADDED : மார் 19, 2025 04:39 AM

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழில் வெளியான தினமும் ஒரு ரோடு படம் எதிரொலியாக ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ரோட்டை சீரமைக்கும் பணி நடந்தது.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு துாத்துக்குடி செல்லும் வழியில் அரை கி.மீ., துாரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்கின்றனர்.
பாலத்தில் ரோடு சேதமடைந்துள்து குறித்து தினமலர் நாளிதழில் தினமும் ஒரு ரோடு பகுதியில் படம் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தில் ரோட்டை சீரமைக்கும் பணி நடந்தது.