/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வெள்ளாடுகளை விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள் வெள்ளாடுகளை விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள்
வெள்ளாடுகளை விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள்
வெள்ளாடுகளை விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள்
வெள்ளாடுகளை விரட்டி கடிக்கும் வெறி நாய்கள் அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூன் 17, 2025 04:54 AM

கீழக்கரை : கீழக்கரை வடக்கு தெரு ரஹ்மானியா நகரில் நேற்று மதியம் வெள்ளாடு ஒன்றை பத்திற்கும் மேற்பட்ட வெறி நாய்கள் விரட்டி கடித்தது. வெள்ளாட்டின் கழுத்தைக் கடித்து ரத்த காயம் ஏற்படுத்தியதில் ஆடு மயங்கி விழுந்தது. அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, ஆடு, பூனை உள்ளிட்டவைகளை வெறிநாய்கள் மொத்தமாக சேர்ந்து கடித்து காயப்படுத்துகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கீழக்கரை நகராட்சி சார்பில் முன்பு பொதுமக்களுக்கு இடையூறாக தொல்லை தந்த வெறி நாய்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு உரிய நடவடிக்கை இல்லாததால் மீண்டும் வெறிநாய்கள் தொல்லை தலை துாக்கி உள்ளது. ஏராளமான பள்ளி மாணவர்கள் வீடுகளின் அருகே விளையாடும் போது வெறிநாய்கள் துரத்துகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக குறிப்பிட்ட நிதியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.