/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியில் 19.19 லட்சம் பேருக்கு சேவை வழங்கல்தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியில் 19.19 லட்சம் பேருக்கு சேவை வழங்கல்
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியில் 19.19 லட்சம் பேருக்கு சேவை வழங்கல்
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியில் 19.19 லட்சம் பேருக்கு சேவை வழங்கல்
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியில் 19.19 லட்சம் பேருக்கு சேவை வழங்கல்
ADDED : ஜன 06, 2024 05:40 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆம்புலன்ஸ் 108 உதவியுடன் 19 லட்சத்து 19ஆயிரத்து 505 பேருக்கு 2023 ல் சேவை வழங்கப்பட்டுள்ளது.நிர்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:
விஷம்குடித்தவர்கள் 72,681 பேர், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 299 பேர், அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் 4188, விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் 47,631, சிறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் 88,205 பேர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 520, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 55,555, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 738 பேரும், காய்ச்சல் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 2259, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 9703, பச்சிளம் குழந்தைகள் 22 ஆயிரத்து 450 பேர், 2வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10,943 பேரும், பிரசவத்திற்காக 5லட்சத்து 7071 பேரும், சுவாசக்கோளாறுகளால் 10லட்சத்து 2771 பேரும், பக்கவாதம், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்வோர்கள் 45,387 பேர்.
தற்கொலைக்கு முயன்றவர்கள் 15,050, சுய நினைவில்லாதவர்கள் 63,079, வாகனம் அல்லாத காயங்களில் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 11 ஆயிரத்து 804 பேரும், வாகனங்களால் காயமடைந்த 3 லட்சத்து 34 ஆயிரத்து 527 பேரும் ஆம்புலன்ஸ் 108 ஆல் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சேவை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 2023 ல் 19 லட்சத்து 19 ஆயிரத்து 505 பேருக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரத்து 509 பேருக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது.