ADDED : ஜன 03, 2024 05:56 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மேலமடை கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராக்கச்சி 89. மண் சுவரில் கட்டப்பட்ட இவரது குடிசையில் நேற்று முன்தினம் தீப்பற்றியதில் முற்றிலும் வீடு சேதம் அடைந்தது.
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், மண்டல துணை தாசில்தார் பரமசிவன், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், வி.ஏ.ஓ., கோகிலா ஆகியோர் மூதாட்டிக்கு ரூ.8000 பணம், அரிசி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினர்.