ADDED : செப் 18, 2025 06:32 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முத்து செப்.,1ல் உயிரிழந்தார்.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் மாநில செயலாளர் தமிழ்முருகன் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு 24 மணிநேர பணிபுரியும் வகையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். மருத்துவர்களின் வருகையை முறையாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.