/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இளமனுார் வழக்கில் தலைமறைவுகைது செய்யக்கோரி போராட்டம் இளமனுார் வழக்கில் தலைமறைவுகைது செய்யக்கோரி போராட்டம்
இளமனுார் வழக்கில் தலைமறைவுகைது செய்யக்கோரி போராட்டம்
இளமனுார் வழக்கில் தலைமறைவுகைது செய்யக்கோரி போராட்டம்
இளமனுார் வழக்கில் தலைமறைவுகைது செய்யக்கோரி போராட்டம்
ADDED : ஜூன் 11, 2025 07:04 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே இளமனுாரில் பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைகைது செய்ய வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் உதயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். சமூக ஆர்வலர் தமிழ்வாணன், ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் விஸ்வை குமார் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணைச் செயலாளர் திருமுருக செல்வன், முத்துக்குமார் தென் மண்டல ஊடகப்பிரிவு, பெரியார் பேரவை நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இளமனுாரில் பட்டியல் இனத்தவர் மீது தாக்குதல் நடத்தி தலைமறைவாக இருப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வன் கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.