Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மண்ணுயிர் காத்து மகசூல் அதிகரிக்கலாம்... விவசாயிகளுக்கு அழைப்பு

மண்ணுயிர் காத்து மகசூல் அதிகரிக்கலாம்... விவசாயிகளுக்கு அழைப்பு

மண்ணுயிர் காத்து மகசூல் அதிகரிக்கலாம்... விவசாயிகளுக்கு அழைப்பு

மண்ணுயிர் காத்து மகசூல் அதிகரிக்கலாம்... விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 07, 2024 11:03 PM


Google News
ஒரே மாதிரியான பயிர் தொடர் சாகுபடி, ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளம் பாதிக்கப்படுகிறது. மண்ணின் வளத்தை பாதுகாத்து நஞ்சில்லா இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.7 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மண்ணில் உயிர் சத்துக்களை அதிகரித்து பயிர் மகசூலை அதிகரிக்க ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரவிதைகள் ரூ.1000 மானியம், மண்புழு உரம் தயாரிக்க 2 மண்புழு உரப்படுக்கைகளுக்கு ரூ.6000 மானியம் வழங்கப்படும்.

ரசாயன உரப் பயன்பாட்டை குறைக்க நடப்பாண்டில் 121 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றுக்கு 100 மண் மாதிரிகள் வீதம் 12 ஆயிரத்து 100 மண் மாதிரிகளை சேகரித்து மண்வள அட்டைகள் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் 500 பேருக்கு பயிர் சாகுபடி தொகுப்பு, ஒரு கறவை மாடு அல்லது 10 வெள்ளாடுகள் கொள்முதல் செய்தல், ஒரு தேனீ பெட்டி, ஒரு மண்புழு உரப்படுக்கை உள்ளிட்ட இனங்களுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரம் மற்றும் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் வழங்கப்பட உள்ளது.

எனவே அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற உழவர் செயலி வழியாக முன் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us