/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைக்க தடை செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைக்க தடை
செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைக்க தடை
செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைக்க தடை
செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைக்க தடை
ADDED : செப் 11, 2025 10:46 PM

தொண்டி; கிழக்கு கடற்கரை சாலையில் செக்போஸ்ட் அருகே பிளக்ஸ் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி செக்போஸ்ட் அருகே நிறைய விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றிய போலீசார், தொண்டி செக்போஸ்ட் அருகே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் மற்றும் தட்டி போர்டுகள் வைக்க தடைவிதித்தனர். மீறி விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போர்டுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.