ADDED : பிப் 12, 2024 04:35 AM

ராமநாதபுரம்: பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை முத்துமாரி தலைமை வகித்தார். ஜன.29 முதல் 31 வரை பள்ளி அளவில் நடந்த சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்வியாளர் நத்தர்ஷா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மணிகண்டன் ராஜா, ஹாஜாமைதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.