/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் முட்புதருக்குள் புகுந்தது சாயல்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் முட்புதருக்குள் புகுந்தது
சாயல்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் முட்புதருக்குள் புகுந்தது
சாயல்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் முட்புதருக்குள் புகுந்தது
சாயல்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் முட்புதருக்குள் புகுந்தது
ADDED : செப் 20, 2025 11:41 PM
சாயல்குடி: சாயல்குடி அருகே வேம்பார் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த வேன் முட்புதருக்குள் மோதி விபத்திற்குள்ளானது.
சாயல்குடி அருகே உள்ள மாரியூர், முந்தல், ஒப்பிலான் உள்ளிட்ட கிராமங்களில் படிக்கக்கூடிய மாணவர்களை வேம்பாரில் உள்ள தனியார் பள்ளிக்கு ஏற்றிச் செல்வதற்காக நேற்று காலை 8:00 மணிக்கு வேகமாக வந்த பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஒப்பிலான் அருகே சாலையோர முட்புதருக்குள் சென்று விபத்திற்குள்ளானது.
சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் வேனில் இருந்த இரண்டு பள்ளி மாணவர்களை பத்திரமாக மீட்டனர். வேன் டிரைவர் நரிப்பையூரை சேர்ந்த தினேஷ்குமார் 35, மது போதையில் வேன் இயக்கியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் வேன் டிரைவரை பிடித்து சாயல்குடி போலீசில் ஒப்படைத்தனர். குடி போதையில் வாகனம் இயக்கும் செயல் ஆபத்தாக மாறும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.