/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவியரிடம் 'சில்மிஷம்' தலைமையாசிரியர் 'டிஸ்மிஸ்' மாணவியரிடம் 'சில்மிஷம்' தலைமையாசிரியர் 'டிஸ்மிஸ்'
மாணவியரிடம் 'சில்மிஷம்' தலைமையாசிரியர் 'டிஸ்மிஸ்'
மாணவியரிடம் 'சில்மிஷம்' தலைமையாசிரியர் 'டிஸ்மிஸ்'
மாணவியரிடம் 'சில்மிஷம்' தலைமையாசிரியர் 'டிஸ்மிஸ்'
ADDED : செப் 02, 2025 05:33 AM
ராமநாதபுரம்: தொண்டி அருகே மாணவியரிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி தலைமையாசிரியர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழகன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆண்ட்ரூஸ், 55. இவர், நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். புகாரில், ஆண்ட்ரூஸ் மீது திருவாடானை போலீசார் பிப்.,ல் போக்சோ வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையில், ஆண்ட்ரூஸ் மீதான புகார் நிரூபணமானது. அவரை டிஸ்மிஸ் செய்து இணை இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
'இவரது கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்யவும், கல்வி நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.