/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் விலை உயர்வு போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் விலை உயர்வு
போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் விலை உயர்வு
போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் விலை உயர்வு
போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் விலை உயர்வு
ADDED : செப் 17, 2025 03:28 AM

ராமநாதபுரம் :ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த போலீஸ் கேண்டீன் தனியாருக்கு விடப்பட்டதால் உணவு விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வந்தது.
இதில் உணவுகளின் விலை மற்ற கடைகளை விட மலிவான விலைக்கு விற்பதால் போலீசார் அரசு அலுவலகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைந்தனர்.
இந்நிலையில் போலீஸ் கேண்டீன் தனியாருக்கு ஒத்திகைக்கு விடப்பட்டுள்ளது.
போலீஸ் கேண்டின் செயல்பட்டு வந்த போது மதிய உணவு ரூ.60 க்கு விற்பனையான நிலையில் தற்போது சைவ சாப்பாடு ரூ.80க்கும், அசைவ சாப்பாடு, பிரியாணி ரூ.120க்கும் விற்பனையாகிறது.இது குறித்து ஆயுதப்படை டி.எஸ்.பி., முத்துராமலிங்கம் கூறியதாவது: சமீப காலமாக உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் போலீஸ் கேண்டீன் வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. போதிய வருவாய் இன்றி இயக்குவதால் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அளவுக்கு கூட விற்பனை நடப்பதில்லை. இதனால் தனியார் மூலம் உணவகம் நடத்தப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு ஒத்திகை அடிப்படையில் தற்போது தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவுகளின் விலையும் கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.