Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/  விலை கிடைக்கல: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு....: அரசு நேரடி கொள்முதல் செய்வதற்கு  வலியுறுத்தல்

 விலை கிடைக்கல: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு....: அரசு நேரடி கொள்முதல் செய்வதற்கு  வலியுறுத்தல்

 விலை கிடைக்கல: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு....: அரசு நேரடி கொள்முதல் செய்வதற்கு  வலியுறுத்தல்

 விலை கிடைக்கல: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய்க்கு....: அரசு நேரடி கொள்முதல் செய்வதற்கு  வலியுறுத்தல்

ADDED : ஜூலை 04, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் மிளகாய் சாகுபடி அதிகரித்து வருகிறது. விளைச்சல் கிடைத்தாலும் இடைத்தரகர்கள் தலையீட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. எனவே நெல் போல அரசே நேரடியாக மிளகாய் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, சிக்கல், ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் 19 ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் தனித்துவமான குண்டு மிளகாய் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பணப்பயிர் என்பதாலும், நல்ல மகசூல் கிடைப்பதாலும் ஆண்டு தோறும் 650 முதல் 1300 ஏக்கர் வரை மிளகாய் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். நேரடியாக மசாலா நிறுவனம், மொத்த வியாபாரிகளிடம் விற்க முடியாமல் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்று அதிக கமிஷன் தர வேண்டிய நிலை உள்ளது. இதனால் எதிர்பார்த்த லாபமின்றி பெரிய இழப்பு ஏற்படுகிறது.

குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மிளகாய் மண்டலம் அமைக்க அரசு உத்தரவிட்டது. நடப்பாண்டில் பருவம் தவறிய மழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மிளகாய் கிலோ ரூ.200க்கு விற்றால் தான் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கிலோ ரூ.100 முதல் ரூ.120க்கு கேட்கின்றனர்.

வேளாண் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தரகர்களின் கமிஷனை குறைக்க கூறியுள்ளனர். இருந்தாலும் நெல் போல மிளகாய்க்கும் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us